கம்போர்ட் மெட்ரஸ் லங்கா தனியார் நிறுவனம், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக கைத்தொழில் வளாகத்தில் செயற்றிட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டு மெத்தை உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகக் காணப்படுகிறது.
இதற்குத் தேவையான மூலப்பொருட்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தத் திட்டத்தினூடாக கணிசமான எண்ணிக்கையிலான உள்ளூர் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.