இஸ்மதுல் றஹுமான்
கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் நீர்கொழும்பு,போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் போது நடந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மாணத்திற்கு அமைய கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம். ஏ எம். நிலாம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். உப தலைவராக மற்றொரு சிரேஷ்ட ஊடகவியலாளரான எம்.ஜே.எம். தாஜுதீன் நியமிக்கப்பட்டார்.
செயலாளராக பியாஸ் முகம்மத், உப செயலாளராக எம்.எப். புஷ்ரா, பொருளாளராக எம். எம். பௌஸான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நிரைவேற்றுக் குழு உறுப்பினர்களாக அஹ்சன் ஆரிப், நாச்சியாதீவு பர்வீன், ஸிராஜ் எம் சாஜகான், முஷாரப் மொஹிதீன், எம். எம். இஸ்மதுல் றஹுமான், எஸ்.ஏ. எம். பவாஸ். ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.