

ஏ.எஸ்.எம்.ஜாவித். றுசைக் பாறுக் 2025.10.26
கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் (GDUMA) ஏற்பாடு செய்திருந்த இவ்வருட வாசிப்பு மாத நிகழ்வுகளின் பரிசளிப்பு விழா கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமை வத்தளை நகர சபை கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் எம் ஆர். மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரபல தொழிலதிபரும் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு தலை நகரிலும் வெளி மாவட்டங்களிலும் பல்வேறு உதவிகளை செய்து வருபவருமான ஸீனத் ட்ரேடிங் பிறைவேட் லிமிடெட் உறிமையாளர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். மாஹிர் பிரதம அதிதியாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல் ஹாஜ் எம் சீ ரஸூல் தீன் கொரவ அதிகமாகவும் கலந்து கலந்து கொண்டார்.
ஸூல் தீன் கொரவ அதிகமாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
விசேஷ அதிதிகளாக பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஒய்வு பெற்ற கலாநிதி பாச்சா ஹுஸைன்மியாஇ முன்னாள் ஈரான் நாட்டின் இலங்கைக் கான தூதுவரும் முன்னாள் கொழும்பு மாநார சபை மேயர் ஒமர் காமில் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்
பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இலக்கியமும் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி கொழும்பு ஸாஹிரா பாடசாலை ஆசிரியை ஷஸ்னா நளீம் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
சங்கத்தின் தலைவர் எம் ஆர். மொகிதீன் தலைமை உரையும் பொருளாளர் எம் கே. ஜுமாட் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியர் எஸ்.சி.பௌஸ்தீன் நன்றியுரையை வழங்கினார்.
சிங்கள தமிழ் மற்றும் அகதியா பாடசாலை மாணவர்களுக்கிையில் பேச்சுப் போட்டி கட்டுரை போட்டிகளில் சுமார் 150 மணவ மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர் என சங்கத்தின் இணைச் செயலாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மில் தெரிவித்தார். இவர்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்ன.
அதிதிகளுக்கும் சங்கத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கொள்விக்ப்பட்டதுடன் பிரதம அதிதிக்கு களுத்துறை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவர் அல் ஹாஜ் ஜாபிர், மற்றும் அகில இலங்கை அஹதியா சம்மேளன செயளாலர் அல் ஹாஜ் ஏ.எல்.எம். அஸ்வர் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த போட்டி நிகழ்வுகளில் வத்தளை சென் ஆன்ஸ் பாலிகா மகா வித்தியாலயத்தில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய எம்.நிக்கீசா என்ற மாணவி தமிழ் மொழி மூலம் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் முதலாம் இடம்பெற்று நினைவுச் சின்னத்தையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.










