கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று கொழும்பு குற்றவியல் பிரிவு இன்று (20.02.2025) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு குற்றவியல் பிரிவு இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி மற்றும் அவர் தப்பிச் சென்ற வாகனத்தின் சாரதி என சந்தேகிக்கப்படும் இருவரும் தற்போது கொழும்பு குற்றவியல் பிரிவின் காவலில் உள்ளனர்.