கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பௌத்த நூதனசாலையினுள்ளே அமைந்துள்ள பாக்கிஸ்தான் நாட்டினது பௌத்த அருங்காட்சியகம் முழுமையாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மக்களின் பார்வைக்காக மீளவும் திறந்து வைக்கும் வைபவம் 25.05.2024 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாக்கிஸ்தான் நாட்டு உயர்ஸ்தாகர் பாஹிம் உல் அஸீஸ் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதன் போது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க மற்றும் இலங்கைக்கான பாக்கிஸ்தான் நாட்டின் கவுன்சிலர் அப்சல் மரைக்கார் உள்ளிட்ட பலர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பௌத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு வளமான வரலாற்றையும் கலை மற்றும் கட்டிடக்கலையையும் அளித்துள்ளது. அதன் பல இடிபாடுகள் இன்றும் காந்தாரப் பகுதியில் காணப்படுகின்றன. 2300 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் மௌரிய மன்னரான அசோகரின் கீழ் பௌத்தம் பாகிஸ்தானில் பரவியதாகவும், அது அரசால் ஆதரிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானின் வரலாறு சாட்சியமளிக்கிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானிய பௌத்தத்தை சித்தரிக்கும் கண்காட்சி அரங்கம் உள்ளது.
இக்பால் அலி
25-05-2024