கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பார்வையாளர் நுழைவது, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு வரை மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய நடவடிக்கைகளை சீராக நடத்துவதற்கும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும் உச்ச நேரங்களில் பார்வையாளர் அணுகலைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பயணிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் விமான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.