கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்துக்காக பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரில் ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதானவர் பெண் சந்தேக நபர் கணேமுல்லையைச் சேர்ந்த 62 வயதானவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.