கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரை கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு இளைஞன் காணாமல் போயுள்ளார்.
கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காணாமல் போன 24 வயதுடைய மாணவன் கம்பஹா அஸ்கிரியவைச் சேர்ந்தவராவார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழுவென்று நேற்று (26) காலை கடலில் ஸ்நோர்கெல் அணிந்து கடலின் அடிப்பகுதியைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, மாணவர்களில் ஒருவர் காணாமல் போனார்.
கொழும்பு துறைமுக பொலிசார், கடற்படை பிரிவு டைவர்ஸ் மற்றும் ரங்கல கடற்படை டைவர்ஸ் ஆகியோர் இணைந்து காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் கொழும்பு துறைமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

June 27, 2025
0 Comment
99 Views









