வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக, கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தின் கை ச்சாத்திடுது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும், மேலும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதன் மூலம் இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை விரைவாக முடிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும்.
அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நிலுவையில் உள்ள கடனை மறுசீரமைப்பதன் மூலம் கடன் நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பான இராஜதந்திர குறிப்புகள் பரிமாற்றம், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவிற்கும், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்களுக்கும் இடையே நிதி அமைச்சில் நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை US$ 86,068,439.80 மற்றும் ஜப்பானிய யென் 582,940,944.31 ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் முடிவு, கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த உதவும்.