குடா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களுக்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மில்லகந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல் நில்வலா கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பிட்டபெத்தர பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக கடற்படையின் 10 விசேட அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.