வைத்தியர் எச்.எம். ரபீக்
Pain Management Clinic
இன்று பலவகையான தலைவலிகள் காணப்படுகின்றன. வேறுபட்ட தலைவலிகளுக்கான அறிகுறிகளை வேறுபட்ட வகையில் காண முடியும்.
ஆனால் தலைவலியை மாற்றுமுறை வைத்திய முறையினால் பல்வேறு வகையில் அணுகலாம். இன்று தலைவலிக்கு மாற்றுமுறை வைத்தியமுறையினால், அதிலும் ஒற்றைத் தலைவலியை எடுத்துக்கொண்டால், அதில் பல வகையான தலைவலிகள் காணப்படுகின்றன. தலைவலிக்கு இரண்டு வகையாக காரணங்களை குற்றிப்பிட முடியும்.
- தசை சுருங்குவதனால் ஏற்படும் தலைவலி – நாளக் குழாய்களின் ஒழுங்கின்மை மற்றும் Arteries விரிவதன் மூலம் ஏற்படும் தலைவலி
Certain Contraction, tension headache, back of neck headache, throbbing pain, occupation related headache போன்ற சில தலைவலிகள் மற்றும் தலையின் பின்புறம், கண்களை சுற்றிக் காணப்படும் தலைவலி போன்ற பல்வேறு வகையில் காணப்படும். கழுத்தின் ஒழுங்கீனம் போன்ற காரணங்களாலும் தலைவலி ஏற்படுகின்றது.
migraine headache, cluster headache, caffeine withdrawal headache என்பவற்றையும் குறிப்பிட முடியும்.
நான் கூறுவது என்னவென்றால், இன்று மக்களுக்கு கூடுதலாக ஒற்றைத் தலைவலி காணக்கூடியதாக இருக்கின்றது. ஒற்றைத் தலைவலியை மாற்றுமுறை வைத்தியத்தினால் நன்றாகக் குணப்படுத்த முடியும். இதில் ஆண்களுக்கு 20 – 25 வீதமும் பெண்களுக்கு 25 – 35 வீதமும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு ஹோர்மோன்கள் வேறுபாடுகள் காரணமாக ஒற்றைத்தலைவலி வருகின்றது. முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தலைவலிக்கான சரியான காரணத்தை ஆராய்ந்து அதற்குரிய மருந்துகளை மாற்றுமுறை வைத்தியத்தினால் பெறுவதன் மூலமும், உரிய தெரபியுடிக் முறையை செய்வதன் மூலம் குறைக்க முடியும்.
இதிலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் தலைவலி வருவதுண்டு. அதற்குரிய சப்ளிமெண்ட்களை பெறுவது முக்கியமானதாகும்.
- Chemical Drugs மூலம் ஏற்படும் தலைவலி – Stress, smoking, poor posture, dental factors, blood clotting மற்றும் உயர்த்த தாக்கம் செலுத்தக்கூடிய chemical drug உள்ளுறுப்புக்களை பாதிப்பதன் மூலம் ஏற்படும் தலைவலி என்பவற்றைக் குறிப்பிட முடியும்.
ஒவ்வொருவருடைய தலைவலியையும் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து அதற்குரிய தெரபியுடிக் செய்வதன் மூலம் தலைவலியைக் குறைக்கலாம்.
Diet, Nutrition Supplement, herbal medicine, body work and adjustment (acupuncture), relaxation techniques, color therapy, hydro therapy, self massage, aroma therapy, juice therapy, magnetic field therapy, oxygen therapy, meditation, yoga போன்ற தெரபியுடிக் முறைகளைக் குறிப்பிட முடியும்.
நான் கூறுவது என்னவென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தலைவலி வருகின்றது என்பதை என்னுடைய 40 வருட அனுபவம் மூலம் கண்டுள்ளேன். வைத்தியர்களால் சரியான முறையில் இனங்காணப்படுவதன் மூலம் சரியான வைத்தியத்தை மேற்கொள்ள முடியும். ஆனால் என்னுடைய தனிப்பட்ட ஆய்வின் படி, சரியான முறையில் இனங்காண்பதன் மூலம் மாற்றுமுறை வைத்திய முறையினால் தலைவலியயை முற்றாகக் குணப்படுத்த முடியும். எனவே ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கம் மூலம் என்னைத் தொடர்பு கொள்வதன் ஊடாக உங்களுக்கான சரியான வைத்திய முறையை பெற்றுக்கொள்ள முடியும்.
It’s nice article.
H.M Dr.Rafeek
0779544505