ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டு திருமணச் செலவுகளுடன் சேர்த்து, ஒவ்வொரு தம்பதியினருக்கும் மூன்று இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் நினைவாக, ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு புத்தளம், பாலாவி, நாகவில்லுவ வைட் மண்டபத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஓ.எச்.ஆர்.டி (OHRD) அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு, ஷேக் முஹம்மது பதா அலி அப்துல்லா அல் காஜா அனுசரணை வழங்கினார்.
ஓய்வுபெற்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய விருந்தினர்கள் இந்த விழாவில், இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் மேதகு காலித் நாசர் அல் அமரி பிரதம அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
திருமணத் தம்பதிகளுக்கான உதவிகள் திருமணச் செலவுகளுடன் சேர்த்து,
ஒவ்வொரு தம்பதியினருக்கும் மூன்று இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கொழும்பு மேமன் சங்க வர்த்தகப் பிரமுகர்கள், தொழிலதிபர் டி.எல்.எம். நவாஸ், மற்றும் ரிஷாத் பதியுதீனின் பாரியார் உட்படப் பலரும் தம்பதிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் 20 உலமாக்கள், திருமணப் பதிவாளர், தம்பதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.










