- கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவிப்பு
( ஐ. ஏ. காதிர் கான் )
இன்றைய உலகில் அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், ஒரே நபரின் உலகை ஆட்சி செய்யும் ஆசை காரணமாக மனித குலம் முழுவதும் இன்று துன்பத்திற்குள்ளாகியிருப்பதாகவும், கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு திருநாளை முன்னிட்டு கொழும்பில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முக்கிய திருப்பலியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலக அமைதிக்காக சிறப்பாகப் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அவர் அங்கு வலியுறுத்தினார்.
இந்தக் கால கட்டத்தில் நாம் உலக அமைதிக்காகப் பிரார்த்திக்க வேண்டும் எனவும், ஒரே மனிதனின் சுய நலத்தினாலும், உலகை ஆட்சி செய்யும் ஆசையினாலும் மனித குலம் பெரும் இன்னல்களையும் வேதனைகளையும் எதிர்கொண்டு வருகிறது எனவும் அவர் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.









