ஒரு கோடி ரூபாயுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அவரிடம் இருந்து 170,000 ஆயிரம் ரூபாய் பணமும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.