எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய பாசமிகு ஆசிரியையான செல்வி Z.K.ஹனிஃபா அவர்களின் மறைவை பற்றி மிகுந்த சோகம் மற்றும் நெஞ்சார்ந்த நன்றியுடன், எழுதுகிறேன்.அவருடைய இவ்வுலக பயணம் 2025 ஜூலை 20ஆம் திகதியில், வயது 87 இல் நிறைவடைந்தது.
எங்கள் ஆசிரியை செல்வி Z. K.ஹனிஃபா எப்போதும் எங்களை வழிநடத்திய ஒரு நல்லாசிரியை ஆவார் . அன்னாரை அன்பு நிறைந்த நன்றியுடன் நினைவுகூர்கிறேன்
செல்வி Z. K. ஹனிஃபா அவர்கள் AL-Hidhaya Maha Vidyalaya, Khairiya Girls School, Muslim Ladies College மற்றும் Asian International School ஆகிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றி, எண்ணற்ற மாணவர்களின் வாழ்வில் தனது அறிவாற்றல் மற்றும் இனிய மனப்பான்மையால் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அவர்கள் ஒரு சாதாரண ஆசிரியையாக மட்டும் அல்லாது, வாழ்வை மாற்றியமைத்த ஒரு ஆசிரியையாக நெஞ்சில் பதிந்து நிற்கின்றார். AL-Hidhaya Maha Vidyalaya-வில் Prefects Board-ஐ வழிநடத்திய ஆசிரியையாக, ஒழுக்காற்று குழுவில் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலின் சிந்தனையாக இருந்தார். அவரை நினைவு கூற ,அவருடைய நினைவுகளை உணர, அவரால் உருவான மாணவர்களே சான்று பகர்கின்றனர்
அவர்கள் தலைமையின் கீழ் சிரேஷ்ட மாணவ தலைவராக பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எனது வகுப்பாசிரியையாகவும், ஆங்கிலம் கற்பித்த ஆசிரியையாகவும் திகழ்ந்தார். அவரது ஞானம்(Wisdom), நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் மூலம் உருவாக்கப்பட்ட மாணவர்களுள் நானும் ஒருவன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்,
பிறர், மாணவர்களின் குறைகளை பார்த்த தருணங்களில், அவரால் திறமையை காண முடியுமாக இருந்தது. நுட்பமாகவும், இதமான கட்டுப்பாட்டுடனும் வழிகாட்டிய அவரின் தனிச்சிறப்பான திறமை, மாணவர்களை ஈர்க்கவும் ,நம்பிக்கை கொள்ளவும் வைத்தது. எம்மில் ஒளிந்து கிடந்த ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொணர உந்துதலாக செயற்பட்டார். அவரது வழிகாட்டுதலில் பலர் தங்கள் அங்கீகாரத்தையும் , நோக்கையும், தன்னம்பிக்கையையும் கண்டார்கள். நாங்கள் அவரது வழிகாட்டலில் வடிவமைக்கப்பட்டோம். ஒவ்வொரு சவாலையும் எதிர் நோக்க கற்றுக் கொண்டோம் .
அவரது பிரசன்னமே ஒரு அமைதியான உறுதியின் சக்தியாக இருந்தது. அவர் விதிகளால் இல்லாமல் , தனிப்பட்ட முன்னுதாரணத்தால் வழிநடத்தினார். அவரது எதிர்பார்ப்பு எங்களிடத்தில் பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் உணர வைத்தது.
அவர் தலைமைத்துவம் என்பதை பெருமைக்காக அல்ல, மாறாக பணிவுடன் ஏற்க வேண்டிய பொறுப்பாகவே கற்று தந்தார்.நாங்கள் இன்று தலைமைத்துவ பண்புகளுடன் நல்ல பிரஜைகளாக பவனி வருவதற்கு அவரது வழிகாட்டலும் ஒரு முக்கிய காரணமாகும். மாணவர்களை வடிவமைக்க மட்டுமல்ல, உலகில் அர்த்தமுள்ள பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களாக மாற்றினார்.
அவர் கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றச் செய்தாலும், மாணவர்களினிடையே தாயின் அரவணைப்போடு அன்பை செலுத்தியதின் காரணமாக மாணவர்கள் அவரை பேரன்புடன் நேசித்தனர்.
அவரது உலகளாவிய பயணம் முடிந்தாலும், அவர் எங்களோடு தொடர்ந்தும் இருப்பார் . அவர் நிலைநாட்டிய மரபுகளிலும், தொடந்த வாழ்வுகளிலும். அவர் ஒரு “லெஜெண்ட்”(Legend) என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
செல்வி Z. K. ஹனிஃபா அவர்கள் மாணவர்களின் நினைவில் என்றென்றும் நிலைத்திருப்பார்
அவர்களுக்கு மேலான சுவர்க்கத்தில் இடம் கிடைக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்
மனமார்ந்த நன்றியுடன், என்றும் நினைவில்…
A.F. Feroze Noon
பட்டயக் கணக்காளர்
AL-Hidhaya Maha Vidyalaya-வின் பழைய மாணவர்