ஒக்டோபர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது ஒரு நாளைக்கு சராசரியாக 5,299 பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு நாட்களில் பதிவான 25,965 உடன் ஒப்பிடும்போது இது 14 சதவீத வருடாந்திர அதிகரிப்பாகும். மேலும், இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.75 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து 3,86,030 (22%), இங்கிலாந்திலிருந்து 1,64,093 (9%) மற்றும் ரஷ்யாவிலிருந்து 123,414 (7%) என அதிக எண்ணிக்கையிலான வருகைகளைப் பதிவாகியுள்ளது.
மேலும், முதல் 6 நாட்களில், இந்தியாவில் இருந்து 10,738 (31.5%) சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,684 (10.8%) சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,200 (6.5%) சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 1,988 (5.8%) சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளார்கள்.