இஸ்மதுல் றஹுமான்
ஐ.எம்.எப். ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லமாட்டோம் என தேர்தல் காலத்தில் சந்தி சந்தியாக கூக்குரல் இட்ட தேசிய மக்கள் சக்தியினர்
இது தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நேற்று 06 ஞாயிற்றுக் கிழமை நீர்கொழும்பு, கடற்கரை வீதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடாத்திய ஊடகவியலாலர் சந்திப்பின் போது கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கடந்த வாரம் ஐ.எம்.எப். பிரதிநிதிகள் இலங்கை வந்தனர். ஜனாதிபதி அநுர குமார் திசாநாயக்க, அவரது பொருளாதார குழுவினர் அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.
ஐ.எம்.எப். ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லமாட்டோம், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அது சரிவராது அதனால் அதனை திருத்தியமைப்போம் என சந்தி சந்தியாக மேடைகளில் கூக்குரல் இட்ட, பாராளுமன்றத்திலும் எதிர்த்த தேசிய மக்கள் சக்தியினர் இது தொடர்பாக ஒரு வார்த்தை கூட கதைக்கவில்லை.
அவர் தேர்தலுக்கு முன்னர் சொன்தை செய்யாமல் இருப்பது கவலையானது. ஆனாலும் நாடு என்ற முறையில் இப்படியே செல்வது மகிழ்ச்சிக்குறிய விடயமாகும்.
ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச் சென்ற பொருளாதாரக் கொள்கையில் ஒரு எழுத்தைக் கூட மாற்ற முடியாது என்பதை நாம் அறிந்திருந்தோம்.
ஜேவிபி, என்பிபி, அவர்களது பொருளாதாரக்குழு, அரசியல்குழு என்பன மக்களுக்கு திரும்பத் திரும்பச் சொன்னார்கள் ஐ.எம்.எப் ஒப்பந்தம் பிழையானது. அதனை திருத்த வேண்டும். அதற்கு நாங்கள் உடன்படுவதில்லை. நாங்கள் வந்தால் அதனை நீக்குமாறு கூறுவோம் என சொன்னார்கள். ஆனால் கடந்த கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஐ.எம்.எப். ஒப்பந்தை மாற்றுவதற்காக ஒரு நிமிடத்தையாவது செலவழிக்கவில்லை.
அவர்களின் பொருளாதாரக் குழுவின் பிரதானி கூறுகிறார் ஒரு கிழமைக்குள் சிறந்த வெற்றியை ஈட்டியுள்ளோம் என்று. ஐ.எம்.எப். ஒப்பந்தம் ஒரு கிழமையல்ல கடந்த இரண்டு வருடங்களாக முன்ணெடுத்துச் செல்லும் மிக சிறந்த வேலைத்திட்டம். இந்த வேலைத்திட்டத்தை மத்திய வங்கி ஆளுனர், திறைச்சேரி செயலாளர், இந்த நாட்டிலுள்ள சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவினரின் நீண்டகால திட்டமாகும்.
மத்திய வங்கி ஆளுனர், திறைச்சேரி செயலாளர் ஆகியோர் பொருளாதார கொலையாளிகள் அவர்களை விரட்டுவோம் என தேர்தல் காலத்தில் கூறினார்கள். ஆனால் தற்போது அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க நியமித்தவர்களுடன் ஒன்றாக வேலை செய்து பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
மேடைகளில் எதைத்தான் பேசினாலும் தற்போது முன்னெடுக்கும் வேலைத்திட்டம் சிறந்தது. அப்படித்தான் செல்ல வேண்டும்.
மக்களுக்கு நீங்கள் சொன்னதை அவர்களுடன் தீர்த்துக்கொள்ளுங்கள். இந்த திட்டத்திலிருந்து வெளியேறினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பதை சொல்லிவைக்கிறேன்.
ஐ.எம்.எப். இன் பாரியளவிலான மறுசீரமைப்புத் திட்டங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். அப்போது நாம் சொன்னவையும் அவர்கள் எதிர்த்ததும் நிணைவில் வரும். ஐ.எம்.எப். ஒப்பந்தம் தொடர்பாக நாம் கொடுத்த வாக்குறுதியை போல் அவர்களுக்கு அதனை நிறைவேற்ற வேண்டிய நிலமை ஏற்படும்.
தே.ம.ச. எதிர்பார்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு. அதனால் அவர்கள் வெளியில் ஐ.எம்.எப். தொடர்பாக பேசுவதில்லை. அது அப்படியே செல்கின்றது.
நாம் நாடு பூராகவும் சகல மாவட்டங்களிலும் பாரிய கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். தேசிய மக்கள் சக்திக்கு தெளிவான அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொடுங்கள். நாம் மக்களிடம் கேட்பது எமக்கு பலவாய்ந்த எதிர்கட்சி அதிகாரத்தை பெற்றுத்தாருங்கள் என்று கூறினார்.