முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட சோதனையின்போது இன்று (07) காலை குறித்த பொலிஸ் அதிகாரி 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.