இவ்வருடம் ஆரம்பித்து மே 25 ஆம் திகதிக்கு இடையில் இடம்பெற்ற 1,003 வீதி விபத்துகளில் 1,062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில், 2064 வீதி விபத்துகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் கிட்டத்தட்ட 7000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்