இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் 05.08.2024 ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகிறார்.
அவரது பாரியாரும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்ப்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.