எல்ல தெமோதரை 9-வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றும் வகையில் புதிய திட்டத்தைத் தொடங்க ரயில்வே திணைக்களமும் மத்திய கலாசார நிதியமும் இணைந்து திட்டமிட்டுள்ளன.
இந்த திட்டத்தின் நோக்கம், சுற்றுலாப் பயணிகள் இரவில் மின் விளக்குகளை ஒளிரச் செய்து இந்தப் பகுதியைப் பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர, ஆகஸ்ட் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல் திட்டம் குறித்து ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தரவும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
“சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்குவதற்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் மாத தொடக்கத்தில் இதை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்“ என கூறினார்

July 18, 2025
0 Comment
22 Views