கொழும்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளர் எலிசபெத் மெலன் நேற்று வெப்ரவரி (17) இலங்கை வந்துள்ளார். அவர் தமது விஜயத்தின்போது அரசாங்க அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் இளைஞர் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவம், இலங்கையின் தகவல் மற்றும் ஊடக வெளியைப் பாதுகாப்பது மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார். தமது இலங்கை விஜயத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளர் எலிசபெத் மெலன் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.










