வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 8 விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிவரை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி மற்றும் பொல்கஹவெல உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் விசேட ரயில் சேவைகள் தினமும் இயக்கப்படும்.
அதனடிப்படையில் விசேட ரயிலுக்கான விபரம் பின்வருமாறு,
விசேட ரயில் எண். 1 கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு காலை 8.55 மணிக்கு புறப்படும்.
விசேட ரயில் எண். 3 கண்டியிலிருந்து மாத்தளைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும்.
விசேட ரயில் எண். 4 கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு 11.30 மணிக்கு புறப்படும்.
விசேட ரயில் எண். 5 கண்டியிலிருந்து மாத்தளைக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும்.
விசேட ரயில் எண். 6 மாத்தளையிலிருந்து நாவலப்பிட்டிக்கு பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும்.
விசேட ரயில் எண். 7 கண்டியிலிருந்து நாவலப்பிட்டிக்கு இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும்.
விசேட ரயில் எண். 8 கண்டியிலிருந்து பொல்கஹவெலவுக்கு இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும்.

July 29, 2025
0 Comment
5 Views