ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான
யூ.எல். மப்றூக் மீது அட்டாளைச்சேனை பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் கடந்த ஜூலை 2ஆம் திகதி புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது.
“என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே ஊடகவியலாளர் மீது
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸ்
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு ஊடகவியலாளர்களின் ஊடகப் பணிக்கு விடுக்கும் நேரடி
அச்சுறுத்தலாகும். அத்துடன் ஊடக சுதந்திரத்தினையும் கேள்விக்குரியாக்கின்றது.
ஊடகவியலாளர் மப்றூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள்
எதிர்காலத்தில் ஏனைய ஊடகவியலாளர்கள் மீது இடம்பெறாததை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டியுள்ளது.
அதனால், இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் உடனடியாக கைது
செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் என மீடியா போரம் வேண்டுகோள்
விடுக்கிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உரிய நீதி கிடைக்க தேவையான
நடவடிக்கைகளை பதில் பொலிஸ் மா அதிபர் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றது.