இஸ்மதுல் றஹுமான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 75 மாதங்கள் நிரைவை நினைவு கூறும் அமைதி ஆர்ப்பாட்டம் நேற்று 22ம் திகதி திங்கட்கிழமை மாலை நீர்கொழும்பு கட்டுவபிட்டி சந்தியில் இடம்பெற்றது.
நவாலி தேவஸ்தானத்திற்கு குண்டு தாக்குதல் நடாத்தி 30 வருடங்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வரலாற்றின் மற்றுமொரு துன்பகரமான சம்பவம் மாத்திரமா? 75 மாதங்கள் நிரைவு கொலையாளிகளை உடன் வெளிப்படுத்தும் எனும் தொனிப்பொருளில் நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதி… உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவது உங்கள் பொறுப்பு, உண்மை நீதிக்காக எப்போதும் முன்நிற்போம், அமைதியானவர்களின் எதிரொலி 6 வருடங்களாக தொடர்ந்தும் முன்னிலையில், நீதியின் தாமதம் நீதி நிலைநாட்டப்படமாட்டாது என்பதா?, நீதி உண்மை நிலைநாட்டப்படும் வரை போராட்டம் தொடரும் போன்ற சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.