இஸ்மதுல் றஹுமான்
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி இன்னும் தாமதம். திட்டமிட்டவர்கள், பிரதான சூத்திரதாரி, கொலையாளிகள் உடனடியாக வெளிப்படுத்து” எனும் தொனிப் பொருளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு வருடங்கள் நிறைவை முன்னிட்டு நீர்கொழும்பு பிரஜைகள் முன்னணி ஏற்பாடு செய்த ஆர்பாட்டம் இன்று 21 திகதி மாலை நீர்கொழும்பு, கட்டுவபிட்டி சந்தியில் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது பேராயர் மல்கம் கார்தினல் ரன்ஜித் அவர்கள் அவ் இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடினார்.
நாடு வங்குரோத்து அடைவதற்கு காரணமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் சொத்துக்களை அரச உடமையாக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு புலனாய்வு பிரிவின் தொடர்பை வெளிப்படுத்து, முன்னாள் சட்டமா அதிபர் கூறிய பாரிய சூழ்ச்சியை வெளிப்படுத்து, உண்மையன. குற்றவாளிகளை நீதியின் முன் கொணடுவா, 6 வருடங்களாக நாம் வீதியில் உண்மை நீதி நிலைநாட்டப்படுவது எப்போது? போன்ற சுலோக அட்டைகளை ஆர்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.