இஸ்மதுல் றஹுமான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 80 மாதங்கள்
நீதி இன்னும் தாமதம் நீதியை உடன் நிரைவேற்று எனும் தொனிப்பொருளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு கட்டுவபிட்டி சந்தியில் நேற்று 21 ம் திகதி மாலை இடம்பெற்றது.
நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டம் இல்லாமல் விடுதலை வராது. யார் அரசாங்கத்தை ஆட்சி செய்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததுடன் அமைதி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி.. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவது உங்கள் பொறுப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிகார வெறியின் செயல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரச அதிகாரத்தை பெறுவதற்கு திட்டமிட்டு செய்த மனிதப் படுகொலை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் சகல பாகங்களையும் பகிரங்கப்படுத்து, முன்னாள் சட்டமா அதிபர் கூறிய பாரிய சூழ்ச்சியை வெளிப்படுத்து,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் புலனாய்வு துறைக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்து, உண்மை, நீதிக்காக எப்போதும் முன்நிற்போம் போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.










