உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 7 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சேவை தேவையின் கருதியே இந்த நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளன.









