வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீட்பு நடவடிக்கைக்களுக்காக இந்திய இராணுவத்தை அனுப்ப அதிகாரிகள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,
அந்தப் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.”நான் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது,” என்று கூறினார்.