இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு உதைபந்து சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சரூஜ் சத்தார், எம்.எம். ஹஸ்னி மொஹமட் ஆகிய இருவரும் நேற்று 6ம் திகதி கால நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க முன்னிலையில் அவரது அலுவலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
சரூஜ் சத்தார் ஹுனுபிட்டிய வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் ஹஸ்னி மொஹமட் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார்.
விஜயபால சர்வதேசம் பெளத்த நிலையத்தின் பாந்துராகொட ராஹுல தேரர், நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம பேஷ்இமாம் மெளலவி ஐ.எல். ஹனீபா ஆகியோர் சமய வழிபாடுகளை நடாத்தினர்.
புதிய உறுப்பினர் சரூஜ் சத்தார் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது தமது சுசேச்சைக் குழுவுக்கு வாக்களித்த சகலருக்கும் நன்றி தெரிவித்ததுடன் நீர்கொழும்பில் சகல இன மக்களுக்கும் எந்தவித வேறுபாடின்றி சேவை செய்வதாகவும் பெரியமுல்லை பிரதேசத்தில் இளைஞர்கள் விளையாடுவதற்காக நீண்டகால குறைபாடாகவுள்ள மைதானம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் முயற்சில் ஈடுபடுவதாகவும், சிறுவர் பூங்கா மற்றும் அங்கசம்பூரண வாசிகசாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக கூறியதுடன் அதற்கு மாநகர ஆணையாளரின் ஒத்துழைப்பை வேண்டிக் கொண்டார்.