ஐ. ஏ. காதிர் கான்
சந்தையில் போஞ்சி விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, சந்தையில் போஞ்சி கிலோ ஒன்றின் விலை 950 முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக, விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, போஞ்சியின் விலை இவ்வாறு உயர்வடைவதற்கு, இடைத்தரகர்களே காரணம் என, விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், இடைத்தரகர்களிடம் இருந்து ஒரு கிலோ போஞ்சி 550 ரூபாவுக்கு கொள் முதல் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இடைத்தரகர்களின் இந்த செயற்பாடு குறித்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










