ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் 17.07.2025 வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.