கொழும்பு
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களிடம் இருந்து இதுவரையில் அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எந்தவொரு நபரும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது