இஸ்ரேல் மீது இடம்பெறும் தாக்குதல்கள், தாக்குதல் நடைபெற்ற இடங்கள் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இராணுவ தணிக்கை இன்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவ தணிக்கை அதிகாரியின் புதிய உத்தரவு:
ஈரான் ஏவுகணை தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இஸ்ரேல் இராணுவ தணிக்கைத் தலைவர் ஜெனரல் கோபி மண்டல்பிட், ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் அல்லது தாக்குதல் இடங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் குடிமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு நேற்று வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவின்படி, “எதிரி ஆயுதங்களால், குறிப்பாக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வாகனங்களால் (UAV) நடத்தப்பட்ட தாக்குதல் இடங்கள் குறித்த தகவல்களை அச்சு ஊடகங்கள், இணையம், சமூக ஊடகங்கள், வலைப்பதிவுகள், அரட்டைகள் ஆகியவற்றில் வெளியிடுபவர்கள், முன் ஒப்புதலுக்கு இராணுவ தணிக்கை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்,” என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய மோதல்களின் போது இராணுவ தணிக்கை விதிமுறைகளை மீறியமைக்கு மத்தியில், பாதுகாப்பு பதற்றங்கள் அதிகரித்துள்ளன. தாக்குதல் இடங்களின் புகைப்படங்கள், பாதிப்பு எண்ணிக்கை, இராணுவ தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பிடங்கள், மற்றும் தணிக்கை அனுமதியின்றி ரகசிய தகவல்களை பரப்புதல் ஆகியவை இந்த மீறல்களில் அடங்கும் என தெரிவித்துள்ளார்.
இராணுவ வட்டாரங்களின்படி, “மிகவும் தீவிரமான கேஸ்களில் ஒன்று” பசான் தொழில்துறை வளாகத்தை இலக்காகக் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் குறித்து பரவிய தகவல்கள் ஆகும்.
சட்ட வல்லுநர்கள், இந்த புதிய உத்தரவு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுக்கு மீறுபவர்களை தண்டிக்க திறம்பட செயல்படும் கருவிகளை வழங்குவதாகவும், இத்தகைய ஆவணங்களை வெளியிடுவது அரசின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
மேலதிக விளக்கம் —
1.ஏவுகளைகள் இடைமறிப்புகள் மற்றும் தரையிறங்கும் காட்சிகளைப் படம்பிடிப்பது தடை.
- சமூக வலைப்பின்னல்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்றுவது தடை.
- போரின் போது அரசுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு வெளிநாட்டு ஊடகமும் நாடு முழுவதும் படம்பிடிப்பதுன் தடை.
- நாட்டின் எல்லைக்குள் உள்ள முக்கியமான இடங்களைப் படம்பிடிப்பதும் தடை.
இவ்வாறான புதிய சட்டங்களுக்கு அபராதங்கள் இல்லை. நேரடியாக 20 மாதங்கள் முதல் 30 மாதங்கள் வரை சிறைத்தண்டனை.
