நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் இன்று காலை மாத்தறை கபுகொடவில் பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் அடங்கும். இந்த சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

August 3, 2025
0 Comment
4 Views