ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த இலவன் ஸ்டார் பிரிமியல் லீக் – 2024′ கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிநாள் நிகழ்வு இவ் விளையாட்டு கழகத்தின் பிரதி தலைவர் அமீன் தலைமையில் 23-06-2024 ஒலுவில் அல்- ஜாயிஷா மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளரும் மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் வெற்றி பெற்ற அணிக்கும், திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பிரதம அதிதியால் வெற்றிக்கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் மெட்றோபொலிடன் கல்லூரியினால் இரண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அமானுல்லாஹ் அவர்களும் கலந்துகொண்டார்.