இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று (12) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரன் முன்னிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆஜர்படுத்திய போது இவ்வாறு உத்தரவிட்டார்.