இலங்கை ரயில் திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரும் (3) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை ரயில் திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரம , இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்க ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.










