இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக பொறியியல் பிரிவு தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று (17) முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை மின்சார சபை 4 பிரிவுகளாக உடைத்து தனியார் கம்பெனிகளுக்கு வழங்குவதை எதிர்த்து இப் போராட்டம் நடைபெற்றது.
மின்சார சபையின் ஒப்பந்தத்தினை மின்சார சபையின் பணிப்பாளர்கள் சபை மறைத்து வைத்துள்ளது.
இதனால் மின்சார சபை தனியார்மயப்படுத்தப்படுவதினால் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டகாரரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இரண்டு வருடத்திற்கு பிறகு பல துண்டுகளாக சபையை பிறித்து தனியார் கம்பெனி மயமாக்கல் அரசினால் நடைபெறுவதாக ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.