பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பஸ்கள் சேவையில் ஈடுபட்டமையினால் கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா வரை வருமானமாக ஈட்ட முடிந்ததாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.டி சந்திரசிறி குறிப்பிட்டார்.
இந்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சுமார் 350 பஸ்களுக்கும் மேலதிகமாக இயக்கப்பட்டதாக அவர் கூறினார்.