கட்டண மாற்றங்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடு பயணம் செய்யும் ஒருவருக்கு நிகழ்நிலையில் பொலிஸ் தடையகற்றல் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு 5000 ரூபாய் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிபரப்பு மேற்கொள்வதற்காக ஆறு மணித்தியாலங்களுக்கு 500 ரூபாவும், ஆறு முதல் 12 மணித்தியாலங்களுக்கு 1000 ரூபாவும், 12 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட நேரத்திற்கு 2000 ரூபாவும் அறவீடு செய்யப்பட உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொலிஸ் தடையகற்றல் அறிக்கைகளுக்காக 500 ரூபா அறவீடு செய்யப்படவுள்ளது.
உள்நாட்டு தேவைகளுக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் அறிக்கைக்காக 300 ரூபா அளவீடு செய்யப்பட உள்ளது.