ஏ.எஸ்.எம்.ஜாவித்
இந்த வகையில் கொழும்பு 12 டேம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இஸ்லாமிய சமய நிகழ்வு ஒன்றினை கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீனின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் டேம் வீதி பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி பி.டி.ரி.டபிள்யு. புஞ்சிகேவாஇ பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஏ.சூஸன் சுரவீரஇ உதவி பொலிஸ் அதிகாரிகளான எம்.ஜி.பிரியந்தஇ ஜே.எம்.பிறேமரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பள்ளிவாசலின் உதவிப் பொருலாளர் அஸ்லம் குஸைன்இ பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி ஹபீழ் உள்ளிட்ட உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பெரிய பள்ளிவாசலின் மதீனதுல் இல்மா அரபிக் கல்லூரியின் மாணவன் ஸாஹிரின் கிராஅத்தை தொடர்ந்து வரவேற்புரையை பள்ளிவாசலின் பொருலாளர் பஸால் மொஹிடீன் வழங்கினார் அதனைத் தொடர்ந்து இலங்கைப் பொலிஸின் 159வது வருட பூர்த்தி நிகழ்வின் விசேட உரையை டேம் வீதி பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி பி.டி.ரி.டபிள்யு. புஞ்சிகேவா வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் அவர்களின் சேவைக்கும் நாட்டிற்காகவும் விசேட துஆப் பிரார்த்தனையை மௌலவி தல்ஹான் வழங்கினார்.
இதன்போது 159 வது பொலிஸ் திணைக்கள நிறைவையொட்டி பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி பி.டி.ரி.டபிள்யு. புஞ்சிகேவா உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளினால் ஹேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

