இஸ்மதுல் றஹுமான்
இஸ்ரேலில் கொல்லப்பட்ட பெண் துப்பாக்கிச் சூடுட்டினால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. உடலின் உட்பகுதியில் துப்பாக்கி ரவைகளின் துண்டுகள் காணப்பட்டன.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினால் கொல்லப்பட்ட இலங்கை பெண்ணான களனியைச் சேர்ந்த அனுலா ஜயதிலக்கவின் பூதவுடல் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.
பிரேத பரிசோதனை நடாத்திய சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம். பிரனாந்துவின் அறிக்கையில் சடலம் பழுதடைவதற்கு ஆரம்பித்துள்ளதாகவும் இம்மரணம் ஏதாவது ஒரு இடத்திலிருந்து கீழே விழுந்ததிலோ அல்லது ஏதாவதொன்று இவரின் மேல் விழுந்ததுலோ இடம்பெறவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடலின் உட்பாகத்திலிருந்து துப்பாக்கி ரவைகளின் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதனால் இது துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட மரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரணத்திற்கு முன் பெண் மீது எந்தவொரு உடல் சித்திரவதைகளும் நடந்தில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் போது மீட்கப்பட்ட ரவைகளின் துண்டுகள் இரசாயண பரிசோதனைக்கா அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புவதாக சட்ட வைத்திய அதிகாரி கூறினார்.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சடலம் பெண்ணின் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரண விசாரணை தொடர்பான நீதிமன்ற விசாரணை நவம்பர் 20 ம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன் (85188) ஈ.எல். டிலன்த மரண விசாரணையை நெறிப்படுத்தினார்.