ஏ.எஸ்.எம்.ஜாவித்
தர்கா நகர் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் 25.10.2023(இன்று) புதன் கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
இதில் விஷேட அம்சமாக இலங்கை நாட்டிற்கே முன்மாதிரியான முறையில் தர்கா நகர் அல்ஹம்றா மகா வித்தியாலயம் இலத்திரனியல் வாக்கு முறை (e-voting system) ஊடாக வாக்கெடுப்பை நடாத்தினார்கள். இதனால் ;
•தேர்தலுக்கு எந்தவித செலவும் இல்லை.
•மனித வளத் தேவைப்பாடு குறைவு.
•எந்தவொரு வாக்கும் நிராகரிக்கப்படவில்லை.
•தேர்தல் முடிவுகளில் வழுக்கள் அரிது.
•தேர்தல் வாக்கெடுப்பு முடிவுற்ற அந்தக்கணமே உடனடியாக தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.