இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
துறைமுக அதிகார சபையின் தற்போதைய முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் மளவிகேயின் பதவிக்காலம் சுமார் 10 ஆண்டுகள் எஞ்சியுள்ள போதிலும், அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புதிய நியமனத்திற்கான அவசியம் தொடர்பான அறிக்கையைக் கோரி, துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.