இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை 26.10.2025 இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதனால் கப்பலில் செல்ல இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.










