ஏ.எஸ்.எம்.ஜாவித்.
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், 2025 ஜூலை 14 ஆம்திகதி, இலங்கை அரசு மற்றும் சவுதி அபிவிருத்திநிதியகம் (Saudi Fund for Development – SFD) இடையேமுக்கிய இருதரப்பு திருத்தப்பட்ட கடன்உடன்படிக்கைகள் (Bilateral Amendatory Loan Agreements) கையெழுத்திடப்பட்டன. இது இலங்கையின்வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒருமிக முக்கிய மைல்கல்லாகும். இந்த முக்கியஉடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை செயல்முறையை ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம், ஒருங்கிணைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதாரஅபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு ஆதாரங்கள் துறைவெளியிட்ட அறிக்கையின் படி:
“பொருளாதார ரீதியாக சவாலான சூழ்நிலை காரணமாககடன் செலுத்துதல்களை நிறுத்தி வைப்பதாக நிலையைஇலங்கை அறிவித்த பிறகும், சவுதி அரேபிய இராச்சியம்தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி, நாட்டின்அபிவிருத்தி திட்டங்கள் தடைபடாமல் செயல்படஉதவியுள்ளது.”
மேலும், “சவுதி அபிவிருத்தி நிதியகத்தால் வழங்கப்பட்டகடன்கள், நாட்டின் மொத்த கடன் சுமையை குறைக்கும்வகையில் சலுகை விதிகளின் கீழ் வழங்கப்பட்டன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்டமொத்த தொகை 516,951,065.02 (சவுதி ரியால்) ஆகும்.
இந்த உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்திஅமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெருமமற்றும் சவுதி அபிவிருத்தி நிதியகத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி (CEO) சுல்தான் அப்துர்ரஹ்மான் ஏ. அல் மார்ஷத்ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சவுதி அரேபிய இராச்சியத்தின் இலங்கைக்கான தூதர்கலித் ஹமூத் அல் கதானி, SFD இன் ஆசியாஇயக்கங்களின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் சவுத் ஆயித்அல்-ஷம்மரி, நடைமுறைத் துறை இயக்குநர் ஃபைசல்சுலைமான் அல்-குஷைபான் மற்றும் அலுவலகவிவகாரங்கள் தலைமை நிர்வாகி ஃபஹத் அப்துல்லா அல்ஹக்பானி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த முக்கிய கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை, இலங்கை மற்றும் சவுதி அரேபியஇராச்சியத்திற்கிடையிலான நீண்டகால இருதரப்புஉறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, SFD வழங்கிய $28 மில்லியன் அமெரிக்கடொலர் மானிய நிதியுடன் செயல்படுத்தப்படும் ‘வயம்பபல்கலைக்கழக நகர திட்டத்தின்’ (Wayamba University Township Development Project) திறப்பு விழாவிலும் அதன்உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் 7 நவீன தொழில்நுட்ப வசதிகளைநிறுவி, 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் தரமான கல்விமற்றும் மேம்பட்ட கற்கைச் சூழலை வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழகத்தின்கல்வித்திறனை மேம்படுத்தி, சுற்றியுள்ள கிராமப்புறசமூகங்களின் நீடித்த பொருளாதார மற்றும் சமூகமுன்னேற்றத்திற்கும் துணை புரியும் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், SFD யின் உயர்மட்ட குழுவினர் ஜனாதிபதி திருஅனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, முக்கியமானபொது சேவைகளின் செயல்திறனைமேம்படுத்துவதற்கான டிஜிட்டல்மயமாக்கல்(digitalization) தொடர்பான ஒத்துழைப்பை உள்ளடக்கியவிரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
சவுதி அபிவிருத்தி நிதியகம் (SFD), 1981 முதல்இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கிவருகிறது. மேலும் இந் நித்தியம் இதுவரை நாடுமுழுவதிலும் நீரியல், வேளாண்மை, போக்குவரத்து, தொடர்பாடல், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்டமுக்கியத் துறைகளில் 15 அபிவிருத்தித் திட்டங்களுக்குநிதியளித்துள்ளது. இலங்கையின் சமூக-பொருளாதாரவளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டஇந்த அபிவிருத்தி நிதியின் மொத்த மதிப்பு USD $424 மில்லியனைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தூதரகம் – ரியாத்
19.07.2025