உலகில் புகைப்பழக்கம் குறைந்துவரும் நாடுகளில் இலங்கையின் (Sri Lanka) நிலை சிறந்த நிலையில் காணப்பட்ட போதிலும் 1.5 மில்லியன் இலங்கையர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (Alchohol and Drug Information Centre) தெரிவித்துள்ளது.
தற்போது புகைப்பழக்கத்திலிருந்து விடுதலையாகி வரும் எமது நாட்டின் இளைஞர்களை மீண்டும் அதற்குள் ஈர்த்துக்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும் குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இளைஞர்களையும் சிறுவர்களையும் புகைப்பழக்கத்திற்கு தூண்டும் வகையில் சட்டவிரோதமான மற்றும் நெறிமுறையற்ற தந்திரோபாயங்களை புகையிலை நிறுவனம் மேற்கொள்வதாகவும் இதன் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணி இருந்தும் இலங்கையில் புகைப்பழக்கம் பாரியளவில் குறைந்துள்ளதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இலங்கையில் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.