லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்வர்ணா விஜேதுங்கவின் கருத்துப்படி, ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 93 குழந்தைகளில் ஒருவர் ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை என அடையாளம் காணப்பட்டதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.