இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேல் தூதரகத்தை திறக்க இஸ்ரேல் அரசு ஆர்வமாக உள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கு பணியகத்தின் தலைவர் ஜொனதன் சிட்கா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இஸ்ரேல் சென்றுள்ள ஊடகவியலாளர்கள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தூதுவராலயம் திறப்பது தொடர்பான கால எல்லை இல்லை என கூறியுள்ள அவர் இலங்கையில் தூதுவராலயம் திறக்க ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இலங்கை தொழிலாளர்களுக்கு மேலும் தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் ஆர்வாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.